சென்ற வாரம் ஒரு வேலையாக சொந்த ஊருக்கு செல்லவேண்டியிருந்தது, எப்பொழுதும் ஊருக்கு செல்வதானால் காரில் தான் செல்வேன் ரயிலில் அல்லது பஸ்சில் செல்வது என்பது எனக்கு சலிப்பான விசயம், ஆனால் இம்முறை ஒரு மாறுதலுக்காக பஸ்சில் செல்வதென முடிவெடுத்தேன், பல வருடங்களுக்கு பிறகு பஸ்சில் செல்வதால் அது ஒரு புதுவித அனுபவமாகவே எனக்கு பட்டது.
பஸ்சில் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்திருந்தேன் எனக்கு அருகில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான் எங்கள் இருக்கைக்கு பக்கவாட்டு இருக்கையில் ஒரு இளம் தம்பதியினர் அமர்ந்திருந்தனர் அதற்க்கு முன் இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் ஒரு இளம் பெண்ணும் அமர்ந்திருந்தனர்
முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி தனது இருக்கையை பின்னோக்கி தள்ள முயற்சித்துக்கொண்டிருந்தார் எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட தெரியவில்லை என்பதே சரி, ஏனெனில் அவருக்கு எந்த buttonஐ press செய்வதென தெரியவில்லை, தடுமாறிக்கொண்டிருந்தார். பக்கத்துக்கு இருக்கைகளில் அமர்ந்திருந்த அனைவரும் நான் உட்பட எவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை (நடத்துனர் உதவியுடன் அந்த பெண்மணி தனது இருக்கையை சரி செய்து கொண்டார் என்பது வேறு விசயம்)
என் உள்ளுணர்வு உதவி செய்ய தூண்டினாலும் ஏதோ ஒன்று என்னை தடுத்துக்கொண்டெயிருந்தது, என் மனநிலையில் தான் மற்றவர்களும் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.யோசித்து பார்க்கையில் ஒரு விசயம் புலப்பட்டது நாம் எல்லோருமே கடிவாளம் கட்டிய குதிரையை போல் தலையை குனிந்தபடி ஒரு நேர்கோட்டு பாதையில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் வழியின் இருபுறங்களிலும் நடப்பதை அறியாமலே. என்றாவது ஒரு நாள் நம் பாதையில் ஒரு இடையுறு வரும்போதுதான் நாம் நிமிர்ந்தே பார்க்கிறோம்.
நாம் தினமும் செல்லும் பாதையில் என்றாவது ஒரு விபத்து ஏற்பட்டால் நம்மில் பெரும்பாலோனோர் உதவி செய்வதற்காய் இறங்கியதேயில்லை, ஒரு "உச்" கொட்டிவிட்டு சென்றுகொண்டேயிருப்போம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த விபத்து நேரும்வரை இந்த "உச்' மட்டும்தான் நம் reaction. ஆனால் கூர்ந்து கவனித்து பாருங்கள் கண்டிப்பாக அந்த இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ தன் உதவிக்கரத்தை நீட்டியிருப்பான். ஒரு குப்பனுக்கும், சுப்பனுக்கும் இருக்கும் அந்த தைரியம் professional என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பலருக்கு ஏன் இல்லை?
ஆரம்ப கால கைப்பேசிகளில் password lock செய்யும் வசதிகள் எல்லாம் கிடையாது எவரும் இன்னொருவர் கைப்பேசியை அவரின் அனுமதியின்றி பயன்படுத்த முடியும் ஆனால் இன்று வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களும் password lock உடன்தான் வருகின்றன, கைபேசிகளை போலவே நாமும் நம் வாழ்க்கைத்தரம் உயர உயர நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்கிறோம் அடுத்தவர்களுக்கு உதவும்முன் நாம் அதன் பின்விளைவுகள் நம் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டிருக்கிறதா என ஒருமுறை அறிந்து கொண்டே செயலில் இறங்குகிறோம்.
அலுவலக நண்பர் ஒருவரின் ஸ்மார்ட் போன் password lock இல்லாமல் இருந்தது, காரணம் விசாரித்தேன், அவர் தந்தை ஒரு சாலை விபத்தில்தான் இறந்திருக்கிறார் அருகில் இருந்தவர்கள் அவர் தந்தையின் கைபேசி மூலம்தான் நண்பருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள், அந்த கைபேசியில் password lock இருந்திருந்தால் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான், தந்தையின் இறப்பு இதை அவருக்கு புரியவைத்திருக்கிறது தன் கைப்பேசியின் password ஐ நீக்கிவிட்டார்.
நானும் என் பாதுகாப்பு வளையத்தை நீக்கிவிட்டேன் கைபேசியில் மட்டுமல்ல மனதில் இருந்தும்தான்... அடுத்த முறை ஏதேனும் சாலை விபத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் இறங்குவேன்.

No comments:
Post a Comment