துரைசாமி...இந்த பெயரை கேட்கும் போதெல்லாம் ஒரு கணம் நின்று திரும்பி பார்க்கிறேன், எனது தாய் மாமாவின் பெயர். பிரதிபலன் எதிர்பாராமல் ஒரு சக மனிதனுக்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் இன்னொரு மனிதனால் செய்ய முடியும் என்று, எனக்கு அவரை பார்த்தபோதுதான் புரிந்தது. தன் தோட்டத்தில் வேலை செய்த குப்பனின் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்தார். இன்று ஒருவர் அரசாங்க வேலையில், மற்றொருவர் அயல்நாட்டில் மற்றும் குப்பனின் மகள் சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறார். கைநாட்டு குப்பன்னின் வீட்டில் இருந்து மூன்று பட்டதாரிகள், எவ்வளவு பெரிய விசயம் இது? ஆனால் மாமா ஒருபோதும் இதை தன் சாதனையாக நினைத்ததேயில்லை.
இப்படி அவர் செய்த செயல்கள் அனைத்துமே மிக மிக பெரியதுதான் ஆனால் ஒருபோதும் அவர் தன் செயல்களை பற்றி பெருமையாய் பேசியதும் இல்லை, அதற்க்கான பிரதிபலனை மற்றவர்களிடம் எதிர்பார்த்ததும் இல்லை.
எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு காலம் அது, பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 க்கு 99 மதிப்பெண்கள் வாங்கி எண்பது விழுக்காடுகளுடன் பள்ளியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தேன் அதனால் எனது தந்தை என் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார், பையன் எப்படியும் நல்ல மதிப்பெண் வாங்கி ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிடுவான் என்று ஆனால் நானோ ஐம்பது விழுக்காடு மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தேன்.
என்மேல் இருந்த எல்லா நம்பிக்கையையும் இழந்திருந்தார் என் அப்பா, என் மதிப்பெண் பட்டியல், இட மாற்று சான்றிதழ் என எதையும் வாங்க அவர் பள்ளிக்கு வரவில்லை. எனது மேல் படிப்பு இனிமேல் மாடு மேய்ப்பது மட்டுமே என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். ஆனால் அதிலும் அவருக்கு ஒரு கவலை இருந்தது பத்து மாடுகள் வாங்கித்தந்தால் அதில் எத்தனை மாடுளைகளை நான் தினமும் உருப்படியாய் வீடு சேர்ப்பேன் என்பதுதான் அந்த கவலை. இனி வீட்டின் பின்புறம் இருக்கும் ஏரியும், மாட்டுதொளுவமும்தான் எனது வாழ்க்கை என நானும் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.
ஊரிலிருந்து மாமா வந்தார், என் மேல் எனக்கும் என் அப்பாவுக்கும் இல்லாத நம்பிக்கையை அவர் வைத்தார். எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வைத்து polytechnic (மொழி பெயர்த்தால் "பல தொழில் நுணுக்கங்களைக் கற்பிக்கும் நிறுவனம்" என வருகிறது அதனால் அப்படியே விட்டுவிட்டேன்) கல்லூரியில் சேர்த்துவிட்டார், என் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்காகவே மீண்டும் படிப்பில் சதம் அடிக்க ஆரம்பித்தேன், அதனால் எனது இளநிலை பொறியியல் படிப்பை எண்பது விழுக்காடு மதிப்பெண்களுடன் முடித்தேன்.
இடைப்பட்ட காலங்களில் என் படிப்புக்கான எல்லா உதவிகளையும் அவர்தான் செய்தார் (பணம் மட்டும் அப்பா, என்ன இருந்தாலும் நான் அவர் பிள்ளைதானே? மாமா ஒரு தகவல் பரிமாற்று ஊடகமாய் இருந்தார்) கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு தேவயான அனைத்து பொருட்களையும் அவர்தான் வாங்கிகொண்டு வருவார். நான் சோர்வடையும் நேரங்களில் அவரின் பேச்சுதான் என்னை புத்துணர்வு அடைய செய்திருக்கிறது. நான் ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்பதில் என்னைவிட அவர் மிகவும் உறுதியாய் இருந்தார்.
பண உதவி மட்டும் என் அப்பா என்று கூறியிருந்தேன் அதற்க்கு காரணம் இருந்தது, ஏற்கனவே என் மாமா தன் ஒரே மகளின் படிப்பு மற்றும் திருமண செலவுகளுக்காக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் இழந்திருந்தார், ஆனால் அவர் எப்பொழுதும் அதற்காக வருந்தியதேயில்லை தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டதாக சந்தோசப்பட்டுக்கொள்வார்.
நல்லவர்களை மட்டும்தான் கடவுள் சோதிப்பார் என்பது என் மாமாவின் வாழ்க்கையிலும் நிஜமானது, தான் செல்லமாக வளர்த்த ஒரே மகளுடன் ஏற்ப்பட்ட மனஸ்தாபம் காரணமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். மகளிடம் மனஸ்தாபம் ஏற்பட்டால் என்ன என்னைப்போல் அவரால் ஆளான எத்தனையோபேர் இருக்கிறோம் எங்களிடம் வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் அவர் எங்களின் பிரதிபலனை எதிர்பாராமல்தான் எங்களுக்கு அனைத்தும் செய்தார் என்பதை சொல்லாமல் சொல்லி சென்றுவிட்டார்.
துரைசாமி...இந்த பெயரை கேட்கும் போதெல்லாம் ஒரு கணம் நின்று திரும்பி பார்க்கிறேன் அது என் மாமாவாக இருக்குமோ என்று, அவர் வாழ்நாளோ அல்லது என் வாழ்நாளோ ஏதோ ஒன்று முடிவதற்க்குள் அவரை எப்படியும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் தேடிக்கொண்டிருக்கிறேன்.
குறைந்தபட்சம் அவர் ஆசை பட்டது போல் நான் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை காட்டவாவது நான் அவரை பார்க்கவேண்டும்...